Tuesday, October 18, 2016

ஜோக்கர்- தமிழ் (2016)

எத்தனை ஆங்கிலப்படங்கள் பார்த்தாலும், எத்தனை கொரியன் படங்கள் பார்த்தாலும் நம்மை நெகிழ்வடையவும், கண்ணீர் சிந்தவும் வைப்பது நம் தாய் மொழிப்படங்களே!!!!! அந்த வகையில் இந்தவாரம் என்னை மிகவும் பாதித்த படம் தான் "ஜோக்கர்"!!!!


படத்தில்... பதவிக்காக சண்டைபோடும் போட்டிபோடும் கட்சிகள் இல்லை, ஆளும் கட்சி, எதிர் கட்சி மோதல்கள் இல்லை, அதிகாரத்திற்காக எம்.எல்.ஏக்கள் போடும் ரகசிய திட்டங்கள் ஏதும் இல்லை, அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடி வெற்றிகாணும் சூப்பர் நாயகன் இல்லை, ஆனால் படம் முழுவதும் வசனத்திற்கு வசனம் அரசியல் பேசுகிறது, அதுவும் ஒரு சாதாரண அடித்தட்டு மக்களின் குரலாக!!!!


டிராஃபிக்’ராமசாமி, சட்டக் கல்லூரி மாணவி நந்தினி போன்றோரின் போராட்டங்களை எவ்வவு நாள் வெறும் செய்திகளாக கடந்திருப்போம், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் அவர்களின் கைதை ஒருவாரம் பேசி இருப்போம் அதன் பின் அவரென்ன ஆனார் என்பதை ஊடகமும் கண்டுகொள்ளவில்லை நாமும் தேடிப்பார்க்கவில்லை!!! இப்படி…. எல்லாம் வணிகமயமாகிப் போன நாட்டில் எந்த தவறையும் தட்டிக்கேட்கவும் மாட்டோம் அப்படி கேட்பவர்களையும் ஜோக்கர்னு சொல்லுவோம்!! இந்த உண்மையை முகத்தில் அடித்தால்போல் உரக்க சொல்லிருக்கும் படம்தான் ஜோக்கர்!!!!!


திரைக்கதை:

தருமபுரி மாவட்டத்திலிருக்கும் பாப்பரப்பட்டி என்ற கிராமத்தில் வசிப்பவர் மன்னர் மன்னன் (குரு சோமசுந்தரம்). கழிவறை இருந்தால் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று கண்டிஷன் போடும் மல்லிகாவுக்காக (ரம்யா பாண்டியன்) அரசாங்கம் அறிவிக்கும் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்ட விண்ணப்பிக்கிறார்.  ஆனால் எப்போதும் போல இதிலும் ஊழல் விளையாட அவருக்கு மிஞ்சியதோ பீங்கான் கோப்பை மட்டுமே!!! பிரதமர் வருகிறார் என்று  அரைகுறையாக எழுப்பப்படும் கழிவறையால் அவரது வாழ்க்கையே சூன்யமாகிறது!!! பெட்டி கேஸ் பொன்னூஞ்சலின் (மூ.ராமசாமி) உதவியோடு நீதிமன்றத்தினை   நாடுகிறார் மன்னர் மன்னன் ஆனால் அவருக்கு மிஞ்சியதோ ஏமாற்றம் மட்டுமே!!!!
இந்த பிரச்சனையால் மனதளவில் பாதிக்கப்பட்டு தன்னை இந்தியாவின் ஜனாதிபதியாக நினைத்துக்கொண்டு கிராம மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்காக பல போராட்டங்களில் ஈடுபடுகிறார். இதற்கிடையே தன் மனைவிக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுகிறார்.
ஊழலுக்கு எதிராக போராடும் இவர்களது போராட்டங்கள் சமூகத்தில் எந்த அளவுக்கு மாற்றங்களை உண்டாக்குகின்றன, எதற்காக மன்னர் மன்னன் தன் மனைவிக்காக உச்ச நீதி மன்றம் வரை செல்கிறார் அங்கு அவருக்கு வெற்றி கிடைத்ததா என்பதை படத்தில் காண்க !!!

கதாபாத்திரங்கள்:


மன்னர் மன்னனாக குரு சோமசுந்தரம்:


10 வருட காலமாக கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சி கற்ற இவர் இதற்குமுன் 10-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்!!!! இன்றுவரை பதிவுலக நண்பர்களால் கொண்டாடப்படும் ஆரண்ய காண்டம் படத்தில் காளையனாக நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றவர்!! அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜின் ஜிகிர்தண்டாவிலும் காமெடி கலந்த இவரது நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது  (பாபி சிம்ஹாவுக்கு நடிப்பு பயிற்சி சொல்லிக்கொடுப்பாரே).
இதுதான் இவருக்கு நாயகனாக முதல் படம்!!!! அதுவும் இருவகையான பாத்திரப்படைப்பு!!!! முதல் பாதி முழுவதும் தன்னை மக்களின் ஜனாதிபதியாக நினைத்துக்கொண்டு இவர் பண்ணும் அளப்பறைகளும் இரண்டாம் பகுதியில் மனைவியுடனான இவரது இயல்பான வாழ்க்கையும் காதலும் என படம் முழுவதும் வாழ்ந்திருக்கிறார்!!!

குறிப்பாக, தன் வீடு தேடி வந்திருக்கும் மல்லிகாவிடம் கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்பார், அதற்கு அவள் ம்..ம்.. பண்ணிக்கலாம். பண்ணிக்கலாம்...நீ வந்து பக்கத்துல உக்காரு என்பாள்.. நான் கட்டிலிலோ அல்லது நாற்காலியிலோ உக்காருவார் என்று தான் நினைத்தேன்.. ஆனால் இவர் உக்காந்ததோ அவளது காலடியில்!!!! இந்த காட்சியொன்றே போதும் இந்த படத்தின் இயல்பையும் இவரது நடிப்புத் திறமையை கூற!!!!!!!!


“பெட்டிகேஸ்” பொன்னூஞ்சலாக ராமசாமி (மூ.ரா) :


தமிழக அரசால் கலைமாமணி விருது பெற்ற இவரும் நாடகக் கலைஞரே!!! இவர் நந்தா, பிதாமகன், பருத்தி வீரன், சண்ட கோழி என பல படங்களில் நடித்துள்ளார்!!! சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு இது தான் முதல் பேர் சொல்லும் படம்!!! அதுவும் முழுநேரமும் கதாநாயகனோடு சுற்றும் சமூக ஆர்வலர் வேடம்!!!!
என்னைப் பொறுத்த வரையில் படத்தின் கதாநாயகன் இவரே!!!! ஏனெனில், மன்னர் மன்னனுக்கும், இசைக்கும் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட காரணங்கள் இருந்தது. ஆனால் இவர் மட்டுமே எந்த வித காரணங்களோ பலனோ இல்லாமல் முழு நேரமும் சமூக அவலங்களை எதிர்த்து கோர்ட் வாசலில் பெட்டிகேஸ் போட்டு நீதிக்காக காத்துக்கிடக்கிறார்!!!! படத்தின் இறுதியில் இவர் பேசும் வசனமே இதற்கு சான்று!!!
இவரது கதாபாத்திரம் ‘டிராஃபிக் ராமசாமி அவர்களின் செயற்பாடுகளையும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் கம்பீரத்தையும் ஞாபகப்படுத்துகின்றன!!!


இதர நடிகர்கள்:
மன்னர் மன்னன் மற்றும் பொன்னூஞ்சலின் போராட்டங்களை சமூக வலைத்தளங்களுக்கு எடுத்துச்செல்லும், கிராமத்து பெண்ணாக இசை (காயத்ரி கிருஷ்ணா) மதுவால் கணவனை இழந்தவர், அடுத்ததாக மன்னர் மன்னனின் மனைவியாக வரும் மல்லிகா (ரம்யா பாண்டியன்)!!! இவர்கள் இருவருமே அவரவர் பாத்திரத்தில் பொருந்தி நடித்துள்ளனர். இவர்களது உடையும், ஒப்பனையும் கிராமத்து பெண்ணாகவே மாற்றிவிடுகிறது!!!!!!

மண்டைக்குள்ள கலவரம் ஆரம்பிச்சிடுச்சு.. இம்மீடியட்டா சரக்கடிச்சே ஆகணும் பையா-னு சொல்ற பவா செல்லத்துரை!!! இலக்கிய வட்டாரத்தில் தனக்கென ரசிகர் வட்டத்தை கொண்ட பிரபல பதிவர் இவர். இதில் மன்னர் மன்னனுடன் வேலை செய்யும் கதா பாத்திரத்தில் வருகிறார். சிறிது நேரமே வந்தாலும் இவர்கள் இருவருக்கும் உண்டான உரையாடல்களே படத்தின் ஓட்டத்தை தீர்மானிக்கின்றன!!!


ஷான் ரோல்டனின் இசை:


குக்கூ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அந்த படத்தின் பாடல்களுக்கு மிக முக்கியப் பங்குண்டு!!!! குக்கூவில் சந்தோஷ் நாராயணனுடன் கைகோர்த்த ராஜு முருகன் இந்த படத்தில் ஷான் ரோல்டனுடன் இணைந்திருக்கிறார்!! குக்கூ படத்தின் போதே தனது அடுத்த படத்திற்கு இசை ஷான் தான் என முடிவு செய்துவிட்டார் இயக்குனர்!!!! அதன் காரணம் இப்பட பாடல்களை கேட்க்கும்போது தெரிகிறது!!!!
ராகவேந்திரா என்னும் தன் இயற்ப்பெயரை சினிமாவுக்காக ஷான் ரோல்டன் என்று மாற்றிக் கொண்டார். இவரது முதல் படமான "வாயை மூடிப் பேசவும்" இருந்து இதுவரை வித்யாசமான பாடல்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர்!!!
ஆனால் எனக்கு ஏனோ இவர் இசையமைத்த பாடல்களை விட இவர் பாடிய பாடல்கள் மீது தான் ஈர்ப்பு அதிகம்!!!! குக்கூவில் "மனசுல சூரக் காத்தே…” மற்றும் “பொட்ட புள்ள..”, நானும் ரௌடிதானில் வரும் “கண்ணான கண்ணே…”, ஒரு நாள் கூத்தில் வரும் “அடியே அழகே….”!!!! என அனைத்தும் அருமையான மெலடிப்பாடல்கள்!!!


பாடல்களே வேண்டாம் என மாறிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் இப்போதைய சூழலில், 6 பாடல்களுடன் வெளியாயிருக்கிறது இந்த படம்!!!   எங்க கண்ட பெண்ணே எங்க கண்ட..என்று கிராமியப்பாடலுடன் தொடங்கும் இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் கதையை கடத்தவே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன!!!!!

இப்படத்தில் வரும் என்னங்க சார் உங்க சட்டம், ஓல ஓல குடுசையில, ஜாஸ்மினு..., செல்லம்மா..., ஹல்லா போல்... , எங்க கண்ட பெண்ணே எங்க கண்ட.. என அனைத்துப் பாடல்களும் உங்களை ரசிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் !! ஒருமுறை கேட்டுப் பாருங்கள்!!


படத்தின் இயக்குனர் ராஜு முருகன்:


இயக்குனர் லிங்குசாமியின் உதவியாளராக திரை வாழ்க்கையை தொடங்கிய இவர் ஆனந்த விகடனில் வெளிவந்த "வட்டியும் முதலும்" தொடரின் மூலம் பிரபலமானார்!!!!
இவரது முதல் படமான குக்கூவில் பார்வையில்லாதவர்களின் காதலை அழகியலோடு சொல்லியவர் இந்த படத்தில் சாமானியனின் பார்வையிலிருந்து அரசியலைச் சொல்லி இருக்கிறார்!!!!


இயக்குநர் ராஜூ முருகனுக்கும், கூடுதலாக வசனத்தில் உதவி செய்திருக்கும் முருகேஷ்பாபுவுக்கும் வாழ்த்துகள்!!! ஏனெனில் எப்போதெல்லாம் படம் தொய்வடைகிறதோ அப்போதெல்லாம் இவர்களது வசனங்களே நம்மை கவனிக்க வைக்கிறது!!!!! ஒரு கண்ணுல காந்தி, இன்னொன்னுல பகத்சிங்கை வச்சிருக்கேன். எனக்கு கோவம் வந்துச்சி பகத்சிங்க அவுத்துவிட்டுருவேன் பாத்துக்க” என்று நம்மை சிரிக்கவைக்கின்றன!! அதே சமயம் "அவர் அப்பா மார் சளிக்காக குடிக்கிறாரு, என் புருசன் நான் மார்ல அடிச்சிக்கணும்னு குடிக்கிறான்" என்று நம்மை சிந்திக்கவும் வைக்கிறது!!!!


படத்தில் ரசித்த வசனங்கள் :
  1. நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?
  2. ஜனாதிபதி வீட்டு கரண்ட் பில்லு எவ்ளோனு கேட்டாக் கூட சொல்லணும்!!!
  3. சகாயம் பண்ணுங்கன்னு சொல்லலை. சகாயம் மாதிரி பண்ணுங்கன்னுதான் சொல்றோம்.!!
  4. குண்டு வைக்கிறவனயெல்லாம் விட்டுருங்க, உண்டகட்டி வாங்கி திண்ணுட்டு கோயில்ல தூங்குறவன பிடிங்க!!!
  5. நாம ஓட்டுப்போட்டுதான அவன் ஆட்சிக்கு வர்றான்...அதுக்கு மட்டும் நமக்கு உரிமை இருக்கு... அவன் அநியாயம் பண்ணா... அவன டிஸ்மிஸ் பண்றதுக்கு நமக்கு உரிமை இல்லையா....?
  6. ஒருத்தியோட அன்புக்கு சமானமா இந்த உலகத்துல ஒண்ணுமே கிடையாதுடா பையா!!!
  7. நமக்கு தேவையானத கொடுக்கலைன்னா !!! நாமளே எடுத்துக்கணும் பைய்யா…. அதுதான் பவரு
  8. நாம யாருக்காக போராடுறமோ, யாருக்காக உயிர விடுறமோ, அவங்களே நம்மள காமெடியனா பாக்கிறதுதான் பெரிய கொடுமை”
  9. மக்களாட்சி என்றால் அது மக்களிடமிருந்தே புறப்பட வேண்டும்..
  10. வாழ்றதுதான் கஷ்டம்னு நெனச்சேன். இந்த நாட்ல பேள்றதகூட கஷ்டமாக்கிட்டானுங்க…”
  11. நூடுல்ஸ தடை பண்ணுனது சைனாகாரனுக்கு புடிக்கல…கூல்ட்ரிங்ஸை தடை பண்ணா அமெரிக்காகாரனுக்கு புடிக்கல…ஹெலிகாப்டர பாத்து கும்பிடாதிங்கடான்னா அது அமைச்சர்களுக்கு புடிக்கல…அரை நாள் உண்ணாவிரதத்துக்கு எதுக்கு ஏர்கூலர்னு கேட்டது எதிர்க்கட்சி தலைவருக்கு புடிக்கல.. கல்லூரி கட்ட தடை…வாரிசு அரசியலுக்கு தடை.. நாக்கை துருத்துறதுக்கு தடை…. கூட்டணி தாவலுக்கு தடை….சாதி மாநாட்டுக்கு தடை. அதனாலதான் என்ன புடிக்கல…
  12. இதே ஆஸ்பத்திரியில போன மாசம் சத்து குறைபாட்டால் 12 குழந்தைங்க செத்துப் போச்சு.. மயக்க மருந்த மாத்தி கொடுத்ததால 2 கர்ப்பிணி பொண்ணுங்க செத்துப் போச்சு… கர்த்தரும் காப்பாத்தல.. மாரியாத்தாளும் காப்பாத்தல… கவெர்மெண்ட்டுதான் காப்பாத்தணும்…
  13. உழைக்கிறவன் வண்டியதானே போலீஸ் புடிச்சு ஸ்டேஷன்ல வைச்சுக்கும்.. எந்த ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னிருக்கா..?
  14. இங்க பாக்க முடியாது. அப்பலோலதான் பாக்கனும்னா, ஓட்டு ஏன் கவர்மென்டுக்கு போடணும். அப்பலோவுக்கே போட்ரலாமே..?
  15. சாராய அதிபர்களுக்கும், கொலைகாரர்களுக்கும் இரண்டடுக்கு பாதுகாப்பு கொடுக்குது இந்த மானங்கெட்ட அரசு
  16. நாட்ல இருக்கிறவங்கள எல்லாம் நடைபிணமா ஆக்கிட்டு யாருக்கு காட்ட போறீங்க உங்க கருணைய.. ஊழல் இல்லாம கக்கூஸ் கட்ட வக்கில்ல. உங்ககிட்ட கருணைய எதிர்பார்த்தது தவறுதான்..
  17. பெத்தவளையும், கட்டுனவளையும் விக்கிற மாதிரில்ல ஓட்ட விக்கிறானுங்க….
  18. மன்னர் மன்னன் மக்கள் ஜனாதிபதியானாவுடன் பெட்டி கேஸ் பொன்னுஞ்சலுடன் இவர் நடத்தும் போராட்டங்கள்:                                     ஆற்று மணல் கொள்ளையை எதிர்த்து REVERSE WALK போராட்டம், காவல் துறையின் காட்டு தர்பாரை எதிர்த்து (கை)விலங்கு தாவும் போராட்டம், சாலை வசதி கேட்டு ரோட்டில் தவழும் போராட்டம், ஊழல் செய்யும் சட்ட மன்ற உறுப்பினரை (கரடியே) காறித்துப்பும் போராட்டம், வேளாண்மை நிலங்களை அபகரிக்கும் செயலை எதிர்த்து குளோபல் போராட்டம், அதிகமாக கட்டணம் வசிக்கும் பள்ளிக்கூடத்தை எதிர்த்து வாயில் அடித்து போராட்டம், ரேஷன் அரிசிப்பதுக்கலை கண்டித்து வாய்க்கரிசி போராட்டம், விவசாயிகளின் வாழ்வுரிமையை காக்க கோவண போராட்டம், தாலிக்கு தங்கம் தாலியறுக்க டாஸ்மாக் – மதுவிலக்கு போராட்டம்!!!!!
இறுதியாக ,


"ஜோக்கர்" உங்களை எல்லா இடத்திலும் குதூகலிக்கச் செய்யும் ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் அல்ல..
சற்று பொறுமையோடு பார்க்க வேண்டிய சமூகப் படம் !!!!…
 
 

Tuesday, October 4, 2016

THE GAME (HOLLYWOOD - 1997)

 
நெறைய ஆங்கிலப்படங்கள் பார்த்திருக்கேன்!!! என்னதான் உலகத்தை காப்பாத்தறது, நாட்டை காப்பாத்தறது இப்படி ஏதும் கெடைக்கலைனா கப்பலு, ட்ரைனு, ஏரோபிளானுனு காப்பாத்தி ப்ரம்மாண்டமா எடுத்தாலும் ஒரு சில படத்தையெல்லாம்  வாய பொளந்துண்டு பார்த்திருக்கேன்!!!! எப்படிடா இவனுங்களுக்கு மட்டும் இப்டி தோணுதுன்னு யோசிச்சிருக்கேன்!!!! அந்த வகையில பார்த்த படம் தான் "THE GAME"
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6nHjySHcsSyz_xIvvZL1vuxuQADguRKrm7B8Qjra4DwRjvjpAOF3VwfjWlM3x1k4EVk7MMPZy8Doy5G_Gr8Ts3uFvwYBYSZ1h2FK_Izrte7EX-MhMfWztn2purM9RkgxpGoZUAm1qTiRj/s320/8853acc09b9ee9659c64d84560ed1980.jpg
 
கதை:
 
NICHOLAS VAN ORTON ஒரு பெரிய பிஸினஸ்மேன். பொண்டாட்டி  டைவர்ஸ் பண்ணிட்டு போனதுக்கு அப்பறம் தனியா ஒரு பங்களால இருக்காரு. ஒரே ஒரு கெழவி மட்டும் அப்பப்ப சோறு பொங்கி போட வருது.
 
நிக்கோலோஸோட 48-ஆவது பிறந்த நாளப்ப அவரோட தம்பி CONRAD ஒரு GIFT ப்ரெசென்ட் பண்றான். அது என்னனா CRS(Consumer Recreation Center)ங்கிற கம்பெனி நடத்தற ஒரு GAME-க்கான என்ட்ரி டோக்கன்.
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgwoylcDPIXq6aqNMDF2tJhmCcWcvdM0vIGdu_j4xy2tULPWQWPPXVGcim3Rx0grw8y_b3fo5prA23aLUytgipK9dPvkEIiws3zjz7lbSdDX45kHavl__YzdppL38xguMzgQz4zHtI2io5/s320/game5.png
 
இத வெளையாடறதுக்கு ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனமும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் வேணும்னு சொல்லி நிக்கோலஸ விளையாடி பார்க்க சொல்லிட்டு போய்டுறான்.
 
ஆனா நம்மாளு WORK பிஸில அத மறந்துடறான். ஒரு நாள் கம்பெனி விஷயமா வெளிய போகும்போது அங்க CRS கம்பெனியோட போர்டு பார்குறான். "சரி நம்ம தம்பி சொன்னானே... போய்த்தான் பாப்போமே" அப்புடின்னு தம்பி கொடுத்த card எடுத்துகிட்டு உள்ளே போறாரு.
 
போய் பாத்தா அது ஒரு கார்ப்ரேட் கம்பெனி மாதிரி இருக்கு. Card  குடுத்த உடனே இவருக்கு  சில எக்ஸாமெல்லாம் வச்சி ஏதேதோ டெஸ்ட் பண்ணிட்டு, "உங்க game எப்ப வேணாலும் ஆரம்பிச்சிடும்... உங்களுக்கு புடிக்கலன்னா நீங்க எப்போ வேணாலும் இதுலருந்து வெலகிக்கலாம்" அப்புடின்னு ரூல்ஸ் லாம் சொல்லி அனுப்பிச்சிடுறாங்க.
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-Nck0p_q7bR4kHDQaQlfWwO3E8q512OVwCvn8GSRF_VCOVeTCkAOHxBXdp9RhWPYM6OfAn6nmWfRozmhq9BrP1w_SAbZdTWY3FnaGfoZEPU81g49tFBYhpDTLswsTcRuqh3cPJLpMqNgp/s400/large-screenshot2.jpg
 
கொஞ்ச நாள் கழிச்சு CRS-கிட்டேயிருந்து , உங்க அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆயிடுச்சுனு போன் வருது. சரி போனால் போகட்டும் போடானு நம்மாளு வீட்டுக்குவரும்போது, அங்க யாரோ குப்புற கவிந்த மாதிரி விழுந்து கிடக்கறதா பாக்குறான் . பக்கத்துல போய் பார்த்தா, அங்க கோமாளி பொம்மை மாதிரி ஒண்ணு கெடக்குது!!! என்ன பண்றதுன்னு தெரியாம அத வீட்டுக்குள்ள எடுத்துட்டு போயி வச்சிட்டு, டிவிய போடுறாரு!
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheTzq7YwPhgmAeRM8lZzdjO9EH8AW7k4VLCzgqJzaoXXFNru1aBdfNHN-Qni-EbskHN6mIlvUzft2XME5y2HjA20rCgRw70uDIZW3Ol4DnrT89FrWWJfB0jzNRiF03bFTKkpTJ4oQN87x5/s400/1411777482600.jpg
 
டிவில வர்ற நியூஸ் வாசிக்கிற ஆளு நிக்கோலஸ் கூட பேசுறாரு!!! அப்பறோம் இவரு வீட்டுல என்னென்ன பண்றாரோ அதெல்லாம் டிவில வருது!!!
 
அப்போ ஆரம்பிக்கிற கன்பீசன் தான். அதுக்கப்புறம் அவரோட வாழ்க்கை மொத்தமும் கன்பீசனாயி, போற எடமெல்லாம் இவருக்கு எதிரிங்க. எது game எது ரியல்னு தெரியாம பைத்தியம் புடிச்சமாதிரி சுத்திட்டு திரியறாரு. இவர கொலை பண்ணவும் வேற ட்ரை பண்றாங்க.
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAJ7fv_HLAS1_9J8myUd8xOjTw1X_Zo5BCIeMk8H2gCaRWS9eQkWtmc0knXX7D9vh3svolSk2eHM9rDmwOKfKkTcjP8mfag_lpQ2Qa6BLZquRBGjPx4r5I9F9Z4oAVQwDAs_8TfO9-fvOi/s400/the-game-michael-douglas-2.jpg
 
நம்மாளுகிட்ட இருக்கிற மொத்தப்பணத்தையும் எடுத்துட்டு மெக்ஸிகோல கொண்டு போய் போட்டுடுறாங்க. அப்பறம் என்ன பண்றதுனு தெரியாம பிச்சையெடுத்து ஊருக்கு வராரு!! யார் பண்றாங்க எதுக்கு பண்றாங்கன்னு தெரியாம ஒரு  கட்டத்துல மெண்டல் மாதிரி சுத்துறாரு. ங்கொய்யால!!!! எவன் இதெல்லாம் பண்றானோ அவனை போட்டு தள்ளிடலாம்னு துப்பாக்கி எடுத்து கெளம்பறாரு!!!!
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgqJuDobAD0oQfrUt2wcQKMcCBUD1cvvPvLd3xjcPUPy15CC0ok5YGpOtY8LN4TK5c5SfPbcxVXfI13LM-Jqw4kyoi3nJ0A-vOUWyWKRNf1PUpRBN9s61r2yXbCtY_yY13QxkSyn1A5EYq/s400/sjff_03_img1062.jpg
 
இதை யாரு பண்ணுனா , அவரு எப்படி இவனுகள கண்டுபிடிச்சாருங்கறத  படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க !!!!!!
 
 என்னடா படத்தை முழுசா சொல்லிட்டான்னு யோசிக்காதீங்க!! இது இன்டெர்மிசன் வரைக்கும் தான்!!! இதுக்கு மேலதான் மெயின் பிக்ச்சரே!!!!!
 
படம் உருவான விதம் :

 
இந்த படத்தோட திரைக்கதையை 1991-லயேய் எழுதிட்டு PRODUCER கிடைக்காம சுத்திட்டிருந்தாங்க!! அப்பறோம் MGM இதை வாங்கி படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணுனா, ஒருத்தனும் வாங்க வரல!! சரினு வந்த விலைக்கு இந்த கதையை இன்னொரு கம்பெனிக்கு வித்துட்டாங்க!!!
 
 கடைசியா நம்ம டேவிட் FINCHER-கு கதை புடிச்சு போய் படமா எடுக்கலாம்னு நெனைச்சா PRODUCER-கிட்ட அந்த அளவுக்கு பணம் இல்ல. சரி அதுக்குள்ள நாம வேற படம் பண்ணுவோம் அவரு பண்ண படம் தான் SE7EN (நம்ம திரிஷ்யம் படம் எடுத்தாரே ஜீத்து ஜோசப் அவரோட மெமொரிஸ் படம் (தமிழ்ல, அருள்நிதி நடிச்ச ஆறாது சினம்) இந்த படத்தோட இன்ஸபிரேஷன் தான்) SE7EN தாறு மாறு ஹிட்டு!!!
 

 
இப்ப அவருக்கு எந்த ஒரு பணப்பிரச்சனையும் இல்ல!! கொறஞ்சது 6 வாரத்துக்கு மேல உக்காந்து படத்தோட ஸ்டோரி அண்ட் ஸ்க்ரீன்பிளேவ மாத்துனாங்க!!! " ஒருத்தன எவ்வளவு வேணா பயப்பட வைக்கலாம் ஆனா சாகடிக்க மட்டும் கூடாது!!!! இதை மட்டும் வெச்சிட்டு full படத்தையும் எழுதி முடிச்சாங்க!!!  
 
இந்த படத்தில ஹீரோவா நடிக்க மைக் டக்ளஸ் ஒதுக்கவே இல்ல. ஏன்னா, இது பெரிய பட்ஜெட் படம், produce பண்றவங்களோ சின்ன கம்பெனி அதனால படம் வருமோ வராதோனு அவருக்கு டவுட்டு!! பட் கதை புடிச்சிருந்ததால நம்பி நடிச்சாரு!!அவரு நெனச்ச மாதிரியே படமும் பெரிய ஹிட்டு!!!!
 
 எந்த ஒரு திரில்லர் படத்திலயும் ஆரம்பம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கிளைமாக்ஸும் முக்கியம்!! எவ்வளவு ட்விஸ்ட் வேணா வெக்கலாம் ஆனா அதுக்கெல்லாத்துக்கும் எல்லோரும் நம்பற மாதிரி ஒரு ஆன்செர் கொடுக்குறமாங்கிறது தான் முக்கியம்!!! அந்தவகையில பார்த்தா இந்த படம் சக்ஸஸ்!!!!
 
 படத்துல ரொம்ப புடிச்சது ஹீரோவோட வாய்ச்சும் அவரு பேசுற வசனமும் தான்!! என்ன இங்கிலிஷ் படம் பார்த்தாலும் subtitle இல்லாம பாக்குறது ரொம்ப கஷ்டம் பட் இதில அந்தப்பிரச்னை இல்ல.
 



 எனக்கு புடிச்ச சில வசனங்கள்:
  1. I’m so fucked. They just fuck you and they fuck you and they fuck you, and then just when you think it’s all over, that’s when the real fucking starts!
  2. The game is tailored specifically to each participant. Think of it as a great vacation, except you don't go to it, it comes to you.
  3. Discovering the object of the game is the object of the game
  4. You don't play it, it plays you
 அப்பறோம், குறிப்பா நம்ம எல்லாருகிட்டேயும் இந்த பழக்கம் இருக்கும்னு நெனைக்கிறேன்!!! ஏதாச்சும் திரில்லர் இல்லனா ஒரு மர்டர் மிஸ்டரி படம் பார்த்தாலும் நாமளே ஒரு கதை யோசிச்சுப்போம், ஹீரோ கண்டுபுடிக்கிறதுக்கு முன்னடியே நாமளே கொலைகாரனை கண்டுபுடிக்க ட்ரை பண்ணுவோம்!! ஒருவேளை சரியாய் இருந்த நமக்கு நாமே சபாஷ் போட்டுக்குவோம்!!!
 
 நீங்க இந்த படம் பார்க்கும்போது இதெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க!!!! என்னால சுத்தமா ஒன்னு கூட கரிக்டா GUESS பண்ண முடில.
 
 உங்களால எவ்ளோ தூரம் கண்டுபுடிக்க முடிஞ்சதுனு கமெண்ட் பண்ணுங்க!!!
 
 கொசுறு :
 
 தமிழ்ல இந்த மாதிரி படமெல்லாம் வர்றது ரொம்ப கஷ்டம்!!! எனக்கு தெரிஞ்ச ஒரே படம் நம்ம புரட்சி தளபதி விஷாலண்ண நடிச்சு திரு டைரக்ட் (நான் சிகப்பு மனிதன் டைரக்டர்) பண்ணிய சம்ம….சம்ம....சமரன்!!! சூப்பர் படம் இல்லனாலும் மொக்க படம் கெடயாது!!!! முடிஞ்சா அந்த படமும் பாருங்க!!