Friday, December 16, 2016

திரை கடல் ஓடியும் திரைப்படம் தேடு இறக்கும் மனிதர்கள்… இறவாப் பாடல்கள் – ஷாகுல் ஹமீது - 2

எனது படித்தவுகளை படித்து வரும்........படிக்க வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!!! இது ஷாகுல் ஹமீது பற்றிய போன பதிவின் நீட்சி.....


1994-ஆம் ஆண்டில் ஷாகுல் ஹமீது அவர்கள் ரஹ்மான் இசையில் மட்டுமில்லாமல் பலரது இசையமைப்பிலும் பாடி அசத்தினார்!!!! ஆனால் ஏனோ ரஹ்மான் இசையில் இவர் பாடிய "வண்டிச்சோலை சின்ராசு", "பவித்ரா", "மே மாதம், "கருத்தம்மா", “காதலன் " போன்ற படப்பாடல்களால் மட்டுமே பலரால் அறியப்பட்டார்!!!!


வண்டிச்சோலை சின்ராசு படத்திலிருந்து இவர் "செந்தமிழ்நாட்டு தமிழச்சியே"மற்றும் கேசட்டில் வராமல் அந்த படத்தின் டைட்டிலில் வரும் பின்னணி பாடலான "சின்னமணியே என் செல்லக்கிளியே" பாடலையும் பாடியிருந்தார்.
"சின்னமணியே என் செல்லக்கிளியே" பாடல் அண்ணன், தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கியிருப்பார் ரஹ்மான். வெறும் கிதார் இசையை மட்டும் துணையாகப் கொண்டு வரும் இப்பாடலை ஹமீதின் குரல் மென்மையான காற்றைப்போல் வருடிச்செல்லும்!!!


https://soundcloud.com/pushparaaja-munusamy/chinna-mayile-unreleased-track


ஆனால், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல வெளியானது "செந்தமிழ்நாட்டு தமிழச்சியே" பாடல்!!!!! இயக்குநர் மனோஜ்குமார் தமிழ் பெண்களின் கலாச்சாரத்தை சொல்லி கதாநாயகன், கதாநாயகிக்கு அறிவுரை கொடுக்குமாறு பாடலை அமைக்க சொல்கிறார். வைரமுத்து ‘தமிழச்சியே’ என்று ஆரம்பித்து பாடல் வரிகளை ரஹ்மானிடம் சொல்ல ‘செந்தமிழ் நாட்டு தமிழச்சியே’ பாடல் உருவாகிறது. பாடலை முழுவதும் எழுதி வாங்கிய பின்தான் இந்த பாடலுக்கு இசை அமைத்திருக்கிறார். துள்ளிசை பாடலான இதில் ஷாகுல் ஹமீதின் கணீர் குரலும், வைரமுத்துவின் வரிகளும், ரஹ்மானின் அசத்தலான இசையும் ஒன்றுக்கொன்று போட்டி போடுவதைப் பார்க்க முடியும். எந்த பாடலும் காலம் கடந்து பேசப்பட வேண்டும் என ரஹ்மான் விரும்புவார். இந்த பாடலும் அதற்கு விதிவிலக்கல்ல.

https://www.youtube.com/watch?v=xbwgBS_lpag


காலம் சென்ற மனோரமா அவர்களுடன் இணைந்து சாகுல் பாடிய “மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்” பாடல் மிகவும் இனிமையான ஒன்று!!!
ஆனால் இந்த பாடல் முடியும்போது நம் மனதில் நீங்காமல் நிற்பது மனோரமா ஆச்சி அவர்களின் குரல் மட்டுமே!!!!


சாரி ஷாகுல் சார்!!!


இதுவரை நீங்கள் பல ஊர்களை பற்றிய பாடல்களை கேட்டிருப்பீர்கள், ஆனால் அப்பாடல் முழுவதும் அதே நிறைந்திருக்குமா என்றால், கிடையாது என்பேன்!!! மத்த பாடல்கள் போல் இல்லாது வைரமுத்து வரிகளில் வந்த இப்பாடல் முழுவதும் மெட்ராஸை பற்றியே இருக்கும்!!!!


https://www.youtube.com/watch?v=Fgx4QdP8jYY


ஜென்டில்மேன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் 1994 ம் ஆண்டில் தயாரிப்பாளர் குஞ்சுமோனுக்காக ஷங்கர் பிரபுதேவா- நக்மா இருவரையும் வைத்து எடுத்த திரைப்படம் "காதலன்". இந்தப் படமும் வணிக ரீதியில் வெற்றிப் படமாக அமைந்து ஷங்கர் திரையுலகில் அழுத்தமாக கால் பதிக்க உதவியது.
இந்த படத்திற்கும் இசையை ரஹ்மானையே முடிவு செய்தார் சங்கர்.  மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றிருந்தன!!! அனைத்தும் தாறு மாறு ஹிட்டாகின!!!! முக்கியமாக "ஊர்வசி ஊர்வசி", தமிழில் புது முயற்சியாக வந்த ராப் பாடலான "பேட்ட ராப்" மற்றும் "முக்கால முக்காபுலா" பாடல்கள் அன்றைய இளைஞரின் தேசிய கீதமானது!!!!
இப்படத்தில் வரும் "ஊர்வசி ஊர்வசி" பாடலில் ஷாகுல் ஒரு சின்ன பிட் மட்டும் பாடியிருப்பார்!!! அது,


பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்....
நீயடி கதியெ கதியே ரெண்டு சொல்லடி குறைந்த பட்சம்!!!!
மற்றும் ,
கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே காதல் நரம்புகள் எந்த பக்கம்....


ரஹ்மான் இவரது குரலை மிகவும் நேர்த்தியாக உபயோகித்திருப்பார் இந்த பாடலில் !!!


https://www.youtube.com/watch?v=Cg3oH5X-n3E


2014-ஆம் ஆண்டு உலகப் புகழ் பாப் பாடகர் Will I Am அவர்கள் “ITS MY BIRTHDAY” என்ற பெயரில் இப்பாடலை ரீமேக் செய்து வெளியிட்டிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு கோடி வைஸ் மற்றும் கெயித் ஹாரிஸ் ஆகியோர் பாடல்வரிகளை எழுதியிருக்கிறார்கள்!!!!!

https://en.wikipedia.org/wiki/It%27s_My_Birthdayhttps://en.wikipedia.org/wiki/It%27s_My_Birthday


https://www.youtube.com/watch?v=JuM7hObGjWI


பாரதி ராஜா தன் தாயாரின் பெயரில் சொந்தமாக தயாரித்து இயக்கிய படம் தான் "கருத்தம்மா"!!! இப்படத்தின் அணைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதினார்!!! இப்படத்தில் இடம்பெறும் "பச்சைக்கிளி பாடும் ஊரு " என்ற பாடலை மின்மினியுடன் இணைந்து பாடியிருப்பார் ஷாகுல்!!! சரணத்தில் “தண்ணி குடம் கொண்ட பொம்பளைய போலே” என்ற சங்கதியுடன் ஆரம்பிக்கும் ஷாகுலின் துள்ளலான குரலும் மின்மினி அவர்களின் மனதை மயக்கும் குரலும் இந்தப்பாடலை பிரபலமாக்கியது!!!

https://www.youtube.com/watch?v=39vTNDEACu8


1994-ஆம் ஆண்டு துவக்கத்தில் சௌந்தர்யன் இசையில் வெளிவந்த சிந்து நதி பூ என்ற படத்திற்காக ஷாகுல் அவர்கள் இரண்டு பாடல்களில் தன் குரலை பதிவு செய்தார் !!!!!
அவை "ஆத்தாடி என்ன ஒடம்பு... அங்கங்கே பச்ச நரம்பு" என்ற குத்து பாடலும், 'குப்பையிலே நெல் வெதைச்சா குத்தமில்ல" என்ற சோகப்பாடலும் ஆகும்!!!! எந்த வகை பாடலுக்கும் பொருந்திப்போகிறது இவரது குரல்!!!! அதுவும் அந்த சோகப்பாடல் அருமை!!!! இரண்டு நிமிடமே ஒலித்தாலும் அது நம் நினைவு விட்டு நகர மறுக்கிறது....


https://www.youtube.com/watch?v=ybBJebIUF1A


அதே ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் சிற்பியின் இசையசமைப்பில் உருவான "கேப்டன்" என்ற திரைப்படத்தில் "இடுப்பு அடிக்கடி புடிக்குது" எனும் குத்து பாடலை சித்ரா மற்றும் மால்குடி சுபாவுடன் இணைந்து பாடியிருந்தார் சாகுல்!!!
இப்பாடலின் சரணத்தில் ஆரம்பிக்கும் "நீ நேத்து பூத்த முல்லை" என்ற இவரது குரல் தான் பாடலை வேறொரு தளத்திற்கு எடுத்து செல்லும்!!!! இல்லையேல் இதுவும் சாதாரண குத்துப் பாடல் வரிசையில் இணைந்திருக்கும்!!!!


https://www.youtube.com/watch?v=i35MgMR43ck


இனி அடுத்ததாக வரும் நிறைவுப் பகுதியில், மற்றும் பல இவரது ஹிட் பாடல்களோடு சந்திக்கிறேன்!!!!!

Friday, November 4, 2016

திரை கடல் ஓடியும் திரைப்படம் தேடு இறக்கும் மனிதர்கள்… இறவாப் பாடல்கள் – ஷாகுல் ஹமீது





நான் முன்பு வேலை செய்த அலுவுலகத்தில் வேலைப் பளு காரணமாக பல சமயங்களில் நைட் ஷிப்ட் பார்த்ததுண்டு!!!! அப்போதெல்லாம் யாரது மொபைலிலிருந்து பாடல்களை ஒலிக்க செய்வது வழக்கம்!!! அப்படி ஒருநாள் இரவு சுமார் 2 மணி வாக்கில் என் நண்பன் இந்த பாடலை ஒலிக்கச்செய்தான்!!!!  

அந்த பாடலை இதற்குமுன் பலமுறை கேட்டுருக்கிறேன், ஆனால் இப்போது அது புதிதாக ஒலிக்கிறது!!! அந்த கோரஸும், இசையும் இவை எல்லாவற்றுக்கும் மேலாக அந்த குரல்!!!! இதுவரை நம் தமிழ் சினிமாவில் அதிகம் கேட்டறியா குரல்!!!

"நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு விட்டு அரளிப் பூச்சூடி அழுதபடி போறவளே" இந்த வரிகள் பாடப்படும்போதே நான் அந்த பாடகரின் விசிறி ஆகிவிட்டேன்!!!

அதன் பின் அவரின் மற்ற பட பாடல்களை தேடினேன்!!! ஒவ்வொன்றும் என்னை ஏதாவது ஒருவகையில் ஆச்சர்யப்படுத்தின!!!! அந்த பாடகரை பற்றியும் தேடிப்பார்த்தேன்!!! ஆனால் கிடைத்த ஒரே விஷயம் அவர் இறந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது என்பது தான்!!!! 

மறைந்து போனாலும்..மறக்க முடியாத பாடல்களை நமக்கு கொடுத்த அந்த மாபெரும் கலைஞனின் பாடல்களை அறியச் செய்வதே இந்தப் பதிவின் நோக்கம்!!!!!

ஷாகுல் ஹமீது - இறக்கும் மனிதர்கள்... இறவாப் பாடல்கள்...



1980 மற்றும் 1990-களில் கோலோச்சிய இசையமைப்பாளரான இளையராஜா அவர்களின் இசையில் SPB, மனோ போன்றோர்கள் முதல் வரிசை பாடகர்களாகவும் அவர்களை தவிர்த்துப் யேசுதாஸ், ஜெயச்சந்திரன் மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகியோர் அடுத்த வரிசை பாடகர்களாகவும் இருந்தனர்!!!!!!!


1992-ல் .ஆர்.ரஹ்மான் அறிமுகத்திற்கு பின் தான் தமிழ் இசைக்கு பல புதுக் குரல்கள் கிடைத்தன. அலைகடலென ஏகப்பட்ட பின்னணிப் பாடகர்கள், பாடகிகளை அவர் அறிமுகம் செய்து வைத்தார். ஹரிஹரன், சங்கர் மகாதேவன், திப்பு, சின்மயி, ஹரிணி, ஸ்ரீநிவாஸ், சுரேஷ் பீட்டர்ஸ்,உன்னி மேனன், உன்னி கிருஷ்ணன்,அனுபமா,நித்யஸ்ரீ, மின்மினி என அவரால் அடையாளம் காட்டப்பட்ட குரல்கள் ஏராளம். இவர்களின் வரவால் தமிழ் சினிமாப் பாடல்களுக்கு புது முகம் கிடைத்தது, புது இளமை கிடைத்தது, புதிய வடிவம் கிடைத்தது. இவர்களினுடே  ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்ட மேலும் ஒருவர் தான் ஷாகுல்  ஹமீது . இவர் ரஹ்மானின் நெருங்கிய நண்பரும் கூட!!!!


1980 களின் ஆரம்பத்தில் ஷாகுல்  ஹமீது தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த  இசைத்தென்றல் என்ற பாடல் நிகழ்ச்சியில் பங்குகொண்டிருந்தார். அங்கே அவர் 30-ற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருந்தார் !!! அப்போதுதான் 1982-ல் நடந்த ஒரு இசைக் கச்சேரியில் ரஹ்மானின் அறிமுகம் கிடைத்தது!!!!


அந்த நாட்களில் ரஹ்மான் ஜிங்கிள்ஸ் எனப்படும் விளம்பர படங்களுக்கு உண்டான இசையை வழங்கி கொண்டிருந்தார்!!!! காலங்கள் நகர்ந்தன கூடவே  அவர்களது நட்பும் வளர்ந்தது!!!! இவ்வாறிருக்கையில் இவர்கள் இருவரும் இணைந்து 1989-ஆம் ஆண்டு " தீன் இசைமாலை " எனும் இஸ்லாமிய பக்தி பாடல் தொகுப்பை வெளியிட்டனர்!!!! அப்போது ரஹ்மான், திலீப் குமார் என்ற தன் இயற்பெயரில் இசை அமைத்துக்கொண்டிருந்தார்!!!



அந்த ஆல்பத்தில் "எல்லா புகழும் இறைவனுக்கே", "எங்கள் அப்துல்", "நாகூர் ஷாகுல் ஹமீது" , “அற்புதம் ஓங்கும்”, “இறையோரின் இறை  பெற்ற”, “எண்திசை உள்ளோரும்மற்றும்நபி  நாதரின்என பல பாடல்களை பாடியிருந்தார் ஷாகுல்!!! மற்ற பாடல்களை மனோ, சுஜாதா ஆகியோர் பாடியிருந்தார்கள்!!!!

தீன் இசைமாலைதொகுப்பில் உள்ள அனைத்துப் பாடல்களும்  யூ-டியூபில் சேர்க்கப்பட்டுள்ளது!!! அதன் லிங்க்:


1991 ஆம் ஆண்டின் தமிழில் சிறந்தவிளம்பர ஜிங்கிள்’க்கான விருதை லியோ காஃபி விளம்பரத்துக்காக ரஹ்மானின் பெயர் அறிவிக்கப்பட்டது. அந்த விளம்பரபடத்தை இயக்கியிருந்தவர் ரஹ்மானின் நண்பர் ராஜீவ் மேனன் ஆவார். ராஜீவ் மேனனின் அழைப்பின் பேரில் அவ்விருதுவழங்கும் விழாவுக்கு மணிரத்னம் வந்திருந்தார் அவ்விருதை ரஹ்மானுக்கு மணிரத்னமே வழங்கி கெளரவித்தார். இதுவே பின்னாளில் இந்திய சினிமாவையையே புரட்டிப்போட்ட ஒரு கூட்டணி அமையகாரணமான ரஹ்மான்&மணிரத்னம் இடையிலான முதல் சந்திப்பு ஆகும்.


1992-ல் ரஹ்மானின் இசை வாழ்கை மணிரத்னம் மூலமாக ரோஜா படத்துடன் ஆரம்பமானது!!! இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டடித்து அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தாலும்  அவருக்கு ஷாகுல் ஹமீதை தனது முதல் படத்தில் உபயோகித்துக்கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் இருந்துகொண்டே இருந்தது. அதற்கு பிராயச்சித்தமாக தனது இசையில் அடுத்து வரும் அனைத்துப்படங்களிலும் அவரது குரலை பயன்படுத்திக்கொண்டார்!!!


1993-ல் ரஹ்மானின் இசையில் 5 படங்கள் வெளிவந்தன, "புதிய முகம்", "ஜென்டில்  மேன்", "கிழக்கு சீமையிலே", "உழவன்", "திருடா திருடா" !!!! இதில் புதிய முகம் தவிர்த்து வந்த அனைத்து படங்களிலும் ஷாகுல் ஹமீதின் பாடல்கள் இடம்பெற்றிருந்தன!!!


1993, ஜூலை 30-ல் ஜென்டில் மேன் படம் வெளியாகி இயக்குனர் ஷங்கரை திரையுலகம் கொண்டாடியது !!! அவருடனே உதயமானது ஷாகுல் அவர்களின் திரைப்பயணம், "உசிலம்பட்டி பெண் குட்டி" பாடல் மூலமாக!!!





இந்தப்பாடலை ஷாகுலுடன் இணைந்து பாடியிருப்பார் ஸ்வர்ணலதா!!!!!! இப்பாடலில் வழக்கத்துக்கு மாறாக ஆண்குரலில் மேல்ஸ்தாயி வரிகளையும் பெண்குரலில் கீழ்ஸ்தாயி வரிகளையும் பாடுமாறு அமைத்திருந்தார். இது அழகான பாடலாக அமைந்தது மட்டுமில்லாமல் ஷாகுலின் வருகையை இசையுலகுக்கு உரக்க சொல்லியது!!!!


1993 தீபாவளியன்று (நவம்பர் 13) ரஹ்மான் இசையில் 3 படங்கள் வெளியாயின!!! 3-லும் ஷாகுலின் பாடல் இடம்பெற்றிருந்தது!!! சொல்லிவைத்தாற்போல் அம்மூன்றுமே கிராமியப்பாடல்கள்!!!
இயக்குநர் கதிர் – ஏ.ஆர் ரஹ்மான் கூட்டணியில் வந்த படங்கள் வசூலில் பெரும் வெற்றி பெறாவிட்டாலும், அந்தப் படங்களின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இருவரும் முதலில் இணைந்த படம் உழவன். இந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்தது. ஆனால் ரஹ்மானின் அலை அப்போதுதான் ஆரம்பித்திருந்த நேரம் என்பதால் படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றன!!!


இந்த படத்தில் “மாரி மழை பெய்யாதோ" என்ற பாடலை பாடியிருப்பார் ஷாகுல்!!! இந்த பாடலை எழுதியவர் கவிஞர் வாலி!!! (இதில் G.V பிரகாஷ் கூட சின்ன பிட் பாடியிருப்பார்)





தன் கிழக்குச் சீமையிலே படத்திற்காக ரஹ்மானுடன் இணைந்தார் பாரதிராஜா!!! மேற்கத்திய இசையில் முத்திரை பதித்தவர் ரஹ்மான் ஆனால் பாரதிராஜாவோ கிராமத்து இசையை வேண்டி நிப்பவர்!!!! இதனாலயே இவர்கள் இணைந்த போது கிழக்கும் மேற்கும் சந்திக்காது என்ற ரீதியில் இகழ்ந்து பேசப்பட்டது. ஆனால் படத்தின் பாடல்கள் வெளிவந்தபோது பலர் ரஹ்மானிடம் இப்படிப்பட்ட கிராமத்து இசை இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை!!!! கிராமிய இசையையும் தன்னால் மண்மணம் மாறாமல் இசையமைக்க முடியும் என்று இப்படம் முலம் நிரூபித்தார் ரஹ்மான்!!!


இப்படத்தில் ஷாகுல் ஹமீது, வைரமுத்து அவர்களின் வரிகளில் உருவான "எதுக்கு பொண்டாட்டி" என்ற பாடலை பாடியிருந்தார்!!!! நாட்டுப்புற பாடல் வரிகள் மற்றும் கிராமிய டப்பாங்குத்து இசையுடன் வெளிவந்த இந்த பாடலும் வெற்றி பாடலே!!!!





இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்ப் போல வெளியானது இவரது அடுத்த பாடல்!! பட்டி தொட்டியெல்லாம் இன்றுவரை நம் அனைவராலும் கொண்டாடப்படுகிறது!!! அது திருடா திருடா என்ற படத்திற்காக ரஹ்மானின் இசையில் உருவான " ராசாத்தி என் உசுரு" என்ற பாடல்!!!!


இந்தப் பாடலை a cappella எனப்படும் இசை முறையில் ரஹ்மான் அவர்கள் இசையமைத்திருந்தார்!!! (a cappella என்பது மிகக் குறைந்த அளவில் இசை அல்லது வாத்திய இசையே இல்லாமல் வெறும் மனித குரல்களை மட்டும் கொண்டே இசைப் பதிவு!!!) ரஹ்மானால் கூட இனிமேல் இப்படி பட்ட பாடலை இசையமைக்க முடியாது என் கருத்து!!!!!! மின்சார கனவு படத்தின் "அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே" பாடலும் இதைப் போன்றதொரு வடிவம்தான் ஆனால் ராசாத்தி பாடல் போல் அது பிரபலமாகவில்லை!!!


ஒருமுறை இந்த பாடலை கேட்டு விட்டு " இந்த பாடல் எனக்கல்லவா எழுதபட்டிருக்க வேண்டும்" என வைரமுத்துவிடம் செல்ல சண்டை போட்டாராம் பாரதி ராஜா!!!!


இசைக்கருவிகளின் ஆதிக்கமே இல்லாமல் வரும் ஷாகுலின் குரலும் அதன் பின் வரும் மின்மினியின் கோரஸும் நம்மை வேறொரு உலகத்துக்கே எடுத்து செல்லும்!!!!! இரவின் அமைதியில் கேட்டுப்பாருங்கள்!!!!





இந்த பாடலின் தெலுங்கு பதிப்பான "சிட்டாலு" வையும் ஷாகுலே பாடியிருப்பார்!!!!
https://www.youtube.com/watch?v=hUEGZwSw3nk
ஷாகுலின் குரல் இனிமையை ரஹ்மான் மட்டுமில்லாமல் மற்ற இசையமைப்பாளர்களும் அடுத்தடுத்த வருடங்களில் பயன்படுத்திக்கொண்டார்கள்!!! அடுத்த பதிவில் இவைகளை பற்றி கூறுகிறேன்.

Tuesday, October 18, 2016

ஜோக்கர்- தமிழ் (2016)

எத்தனை ஆங்கிலப்படங்கள் பார்த்தாலும், எத்தனை கொரியன் படங்கள் பார்த்தாலும் நம்மை நெகிழ்வடையவும், கண்ணீர் சிந்தவும் வைப்பது நம் தாய் மொழிப்படங்களே!!!!! அந்த வகையில் இந்தவாரம் என்னை மிகவும் பாதித்த படம் தான் "ஜோக்கர்"!!!!


படத்தில்... பதவிக்காக சண்டைபோடும் போட்டிபோடும் கட்சிகள் இல்லை, ஆளும் கட்சி, எதிர் கட்சி மோதல்கள் இல்லை, அதிகாரத்திற்காக எம்.எல்.ஏக்கள் போடும் ரகசிய திட்டங்கள் ஏதும் இல்லை, அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடி வெற்றிகாணும் சூப்பர் நாயகன் இல்லை, ஆனால் படம் முழுவதும் வசனத்திற்கு வசனம் அரசியல் பேசுகிறது, அதுவும் ஒரு சாதாரண அடித்தட்டு மக்களின் குரலாக!!!!


டிராஃபிக்’ராமசாமி, சட்டக் கல்லூரி மாணவி நந்தினி போன்றோரின் போராட்டங்களை எவ்வவு நாள் வெறும் செய்திகளாக கடந்திருப்போம், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் அவர்களின் கைதை ஒருவாரம் பேசி இருப்போம் அதன் பின் அவரென்ன ஆனார் என்பதை ஊடகமும் கண்டுகொள்ளவில்லை நாமும் தேடிப்பார்க்கவில்லை!!! இப்படி…. எல்லாம் வணிகமயமாகிப் போன நாட்டில் எந்த தவறையும் தட்டிக்கேட்கவும் மாட்டோம் அப்படி கேட்பவர்களையும் ஜோக்கர்னு சொல்லுவோம்!! இந்த உண்மையை முகத்தில் அடித்தால்போல் உரக்க சொல்லிருக்கும் படம்தான் ஜோக்கர்!!!!!


திரைக்கதை:

தருமபுரி மாவட்டத்திலிருக்கும் பாப்பரப்பட்டி என்ற கிராமத்தில் வசிப்பவர் மன்னர் மன்னன் (குரு சோமசுந்தரம்). கழிவறை இருந்தால் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று கண்டிஷன் போடும் மல்லிகாவுக்காக (ரம்யா பாண்டியன்) அரசாங்கம் அறிவிக்கும் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்ட விண்ணப்பிக்கிறார்.  ஆனால் எப்போதும் போல இதிலும் ஊழல் விளையாட அவருக்கு மிஞ்சியதோ பீங்கான் கோப்பை மட்டுமே!!! பிரதமர் வருகிறார் என்று  அரைகுறையாக எழுப்பப்படும் கழிவறையால் அவரது வாழ்க்கையே சூன்யமாகிறது!!! பெட்டி கேஸ் பொன்னூஞ்சலின் (மூ.ராமசாமி) உதவியோடு நீதிமன்றத்தினை   நாடுகிறார் மன்னர் மன்னன் ஆனால் அவருக்கு மிஞ்சியதோ ஏமாற்றம் மட்டுமே!!!!
இந்த பிரச்சனையால் மனதளவில் பாதிக்கப்பட்டு தன்னை இந்தியாவின் ஜனாதிபதியாக நினைத்துக்கொண்டு கிராம மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்காக பல போராட்டங்களில் ஈடுபடுகிறார். இதற்கிடையே தன் மனைவிக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுகிறார்.
ஊழலுக்கு எதிராக போராடும் இவர்களது போராட்டங்கள் சமூகத்தில் எந்த அளவுக்கு மாற்றங்களை உண்டாக்குகின்றன, எதற்காக மன்னர் மன்னன் தன் மனைவிக்காக உச்ச நீதி மன்றம் வரை செல்கிறார் அங்கு அவருக்கு வெற்றி கிடைத்ததா என்பதை படத்தில் காண்க !!!

கதாபாத்திரங்கள்:


மன்னர் மன்னனாக குரு சோமசுந்தரம்:


10 வருட காலமாக கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சி கற்ற இவர் இதற்குமுன் 10-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்!!!! இன்றுவரை பதிவுலக நண்பர்களால் கொண்டாடப்படும் ஆரண்ய காண்டம் படத்தில் காளையனாக நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றவர்!! அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜின் ஜிகிர்தண்டாவிலும் காமெடி கலந்த இவரது நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது  (பாபி சிம்ஹாவுக்கு நடிப்பு பயிற்சி சொல்லிக்கொடுப்பாரே).
இதுதான் இவருக்கு நாயகனாக முதல் படம்!!!! அதுவும் இருவகையான பாத்திரப்படைப்பு!!!! முதல் பாதி முழுவதும் தன்னை மக்களின் ஜனாதிபதியாக நினைத்துக்கொண்டு இவர் பண்ணும் அளப்பறைகளும் இரண்டாம் பகுதியில் மனைவியுடனான இவரது இயல்பான வாழ்க்கையும் காதலும் என படம் முழுவதும் வாழ்ந்திருக்கிறார்!!!

குறிப்பாக, தன் வீடு தேடி வந்திருக்கும் மல்லிகாவிடம் கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்பார், அதற்கு அவள் ம்..ம்.. பண்ணிக்கலாம். பண்ணிக்கலாம்...நீ வந்து பக்கத்துல உக்காரு என்பாள்.. நான் கட்டிலிலோ அல்லது நாற்காலியிலோ உக்காருவார் என்று தான் நினைத்தேன்.. ஆனால் இவர் உக்காந்ததோ அவளது காலடியில்!!!! இந்த காட்சியொன்றே போதும் இந்த படத்தின் இயல்பையும் இவரது நடிப்புத் திறமையை கூற!!!!!!!!


“பெட்டிகேஸ்” பொன்னூஞ்சலாக ராமசாமி (மூ.ரா) :


தமிழக அரசால் கலைமாமணி விருது பெற்ற இவரும் நாடகக் கலைஞரே!!! இவர் நந்தா, பிதாமகன், பருத்தி வீரன், சண்ட கோழி என பல படங்களில் நடித்துள்ளார்!!! சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு இது தான் முதல் பேர் சொல்லும் படம்!!! அதுவும் முழுநேரமும் கதாநாயகனோடு சுற்றும் சமூக ஆர்வலர் வேடம்!!!!
என்னைப் பொறுத்த வரையில் படத்தின் கதாநாயகன் இவரே!!!! ஏனெனில், மன்னர் மன்னனுக்கும், இசைக்கும் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட காரணங்கள் இருந்தது. ஆனால் இவர் மட்டுமே எந்த வித காரணங்களோ பலனோ இல்லாமல் முழு நேரமும் சமூக அவலங்களை எதிர்த்து கோர்ட் வாசலில் பெட்டிகேஸ் போட்டு நீதிக்காக காத்துக்கிடக்கிறார்!!!! படத்தின் இறுதியில் இவர் பேசும் வசனமே இதற்கு சான்று!!!
இவரது கதாபாத்திரம் ‘டிராஃபிக் ராமசாமி அவர்களின் செயற்பாடுகளையும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் கம்பீரத்தையும் ஞாபகப்படுத்துகின்றன!!!


இதர நடிகர்கள்:
மன்னர் மன்னன் மற்றும் பொன்னூஞ்சலின் போராட்டங்களை சமூக வலைத்தளங்களுக்கு எடுத்துச்செல்லும், கிராமத்து பெண்ணாக இசை (காயத்ரி கிருஷ்ணா) மதுவால் கணவனை இழந்தவர், அடுத்ததாக மன்னர் மன்னனின் மனைவியாக வரும் மல்லிகா (ரம்யா பாண்டியன்)!!! இவர்கள் இருவருமே அவரவர் பாத்திரத்தில் பொருந்தி நடித்துள்ளனர். இவர்களது உடையும், ஒப்பனையும் கிராமத்து பெண்ணாகவே மாற்றிவிடுகிறது!!!!!!

மண்டைக்குள்ள கலவரம் ஆரம்பிச்சிடுச்சு.. இம்மீடியட்டா சரக்கடிச்சே ஆகணும் பையா-னு சொல்ற பவா செல்லத்துரை!!! இலக்கிய வட்டாரத்தில் தனக்கென ரசிகர் வட்டத்தை கொண்ட பிரபல பதிவர் இவர். இதில் மன்னர் மன்னனுடன் வேலை செய்யும் கதா பாத்திரத்தில் வருகிறார். சிறிது நேரமே வந்தாலும் இவர்கள் இருவருக்கும் உண்டான உரையாடல்களே படத்தின் ஓட்டத்தை தீர்மானிக்கின்றன!!!


ஷான் ரோல்டனின் இசை:


குக்கூ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அந்த படத்தின் பாடல்களுக்கு மிக முக்கியப் பங்குண்டு!!!! குக்கூவில் சந்தோஷ் நாராயணனுடன் கைகோர்த்த ராஜு முருகன் இந்த படத்தில் ஷான் ரோல்டனுடன் இணைந்திருக்கிறார்!! குக்கூ படத்தின் போதே தனது அடுத்த படத்திற்கு இசை ஷான் தான் என முடிவு செய்துவிட்டார் இயக்குனர்!!!! அதன் காரணம் இப்பட பாடல்களை கேட்க்கும்போது தெரிகிறது!!!!
ராகவேந்திரா என்னும் தன் இயற்ப்பெயரை சினிமாவுக்காக ஷான் ரோல்டன் என்று மாற்றிக் கொண்டார். இவரது முதல் படமான "வாயை மூடிப் பேசவும்" இருந்து இதுவரை வித்யாசமான பாடல்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர்!!!
ஆனால் எனக்கு ஏனோ இவர் இசையமைத்த பாடல்களை விட இவர் பாடிய பாடல்கள் மீது தான் ஈர்ப்பு அதிகம்!!!! குக்கூவில் "மனசுல சூரக் காத்தே…” மற்றும் “பொட்ட புள்ள..”, நானும் ரௌடிதானில் வரும் “கண்ணான கண்ணே…”, ஒரு நாள் கூத்தில் வரும் “அடியே அழகே….”!!!! என அனைத்தும் அருமையான மெலடிப்பாடல்கள்!!!


பாடல்களே வேண்டாம் என மாறிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் இப்போதைய சூழலில், 6 பாடல்களுடன் வெளியாயிருக்கிறது இந்த படம்!!!   எங்க கண்ட பெண்ணே எங்க கண்ட..என்று கிராமியப்பாடலுடன் தொடங்கும் இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் கதையை கடத்தவே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன!!!!!

இப்படத்தில் வரும் என்னங்க சார் உங்க சட்டம், ஓல ஓல குடுசையில, ஜாஸ்மினு..., செல்லம்மா..., ஹல்லா போல்... , எங்க கண்ட பெண்ணே எங்க கண்ட.. என அனைத்துப் பாடல்களும் உங்களை ரசிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் !! ஒருமுறை கேட்டுப் பாருங்கள்!!


படத்தின் இயக்குனர் ராஜு முருகன்:


இயக்குனர் லிங்குசாமியின் உதவியாளராக திரை வாழ்க்கையை தொடங்கிய இவர் ஆனந்த விகடனில் வெளிவந்த "வட்டியும் முதலும்" தொடரின் மூலம் பிரபலமானார்!!!!
இவரது முதல் படமான குக்கூவில் பார்வையில்லாதவர்களின் காதலை அழகியலோடு சொல்லியவர் இந்த படத்தில் சாமானியனின் பார்வையிலிருந்து அரசியலைச் சொல்லி இருக்கிறார்!!!!


இயக்குநர் ராஜூ முருகனுக்கும், கூடுதலாக வசனத்தில் உதவி செய்திருக்கும் முருகேஷ்பாபுவுக்கும் வாழ்த்துகள்!!! ஏனெனில் எப்போதெல்லாம் படம் தொய்வடைகிறதோ அப்போதெல்லாம் இவர்களது வசனங்களே நம்மை கவனிக்க வைக்கிறது!!!!! ஒரு கண்ணுல காந்தி, இன்னொன்னுல பகத்சிங்கை வச்சிருக்கேன். எனக்கு கோவம் வந்துச்சி பகத்சிங்க அவுத்துவிட்டுருவேன் பாத்துக்க” என்று நம்மை சிரிக்கவைக்கின்றன!! அதே சமயம் "அவர் அப்பா மார் சளிக்காக குடிக்கிறாரு, என் புருசன் நான் மார்ல அடிச்சிக்கணும்னு குடிக்கிறான்" என்று நம்மை சிந்திக்கவும் வைக்கிறது!!!!


படத்தில் ரசித்த வசனங்கள் :
  1. நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?
  2. ஜனாதிபதி வீட்டு கரண்ட் பில்லு எவ்ளோனு கேட்டாக் கூட சொல்லணும்!!!
  3. சகாயம் பண்ணுங்கன்னு சொல்லலை. சகாயம் மாதிரி பண்ணுங்கன்னுதான் சொல்றோம்.!!
  4. குண்டு வைக்கிறவனயெல்லாம் விட்டுருங்க, உண்டகட்டி வாங்கி திண்ணுட்டு கோயில்ல தூங்குறவன பிடிங்க!!!
  5. நாம ஓட்டுப்போட்டுதான அவன் ஆட்சிக்கு வர்றான்...அதுக்கு மட்டும் நமக்கு உரிமை இருக்கு... அவன் அநியாயம் பண்ணா... அவன டிஸ்மிஸ் பண்றதுக்கு நமக்கு உரிமை இல்லையா....?
  6. ஒருத்தியோட அன்புக்கு சமானமா இந்த உலகத்துல ஒண்ணுமே கிடையாதுடா பையா!!!
  7. நமக்கு தேவையானத கொடுக்கலைன்னா !!! நாமளே எடுத்துக்கணும் பைய்யா…. அதுதான் பவரு
  8. நாம யாருக்காக போராடுறமோ, யாருக்காக உயிர விடுறமோ, அவங்களே நம்மள காமெடியனா பாக்கிறதுதான் பெரிய கொடுமை”
  9. மக்களாட்சி என்றால் அது மக்களிடமிருந்தே புறப்பட வேண்டும்..
  10. வாழ்றதுதான் கஷ்டம்னு நெனச்சேன். இந்த நாட்ல பேள்றதகூட கஷ்டமாக்கிட்டானுங்க…”
  11. நூடுல்ஸ தடை பண்ணுனது சைனாகாரனுக்கு புடிக்கல…கூல்ட்ரிங்ஸை தடை பண்ணா அமெரிக்காகாரனுக்கு புடிக்கல…ஹெலிகாப்டர பாத்து கும்பிடாதிங்கடான்னா அது அமைச்சர்களுக்கு புடிக்கல…அரை நாள் உண்ணாவிரதத்துக்கு எதுக்கு ஏர்கூலர்னு கேட்டது எதிர்க்கட்சி தலைவருக்கு புடிக்கல.. கல்லூரி கட்ட தடை…வாரிசு அரசியலுக்கு தடை.. நாக்கை துருத்துறதுக்கு தடை…. கூட்டணி தாவலுக்கு தடை….சாதி மாநாட்டுக்கு தடை. அதனாலதான் என்ன புடிக்கல…
  12. இதே ஆஸ்பத்திரியில போன மாசம் சத்து குறைபாட்டால் 12 குழந்தைங்க செத்துப் போச்சு.. மயக்க மருந்த மாத்தி கொடுத்ததால 2 கர்ப்பிணி பொண்ணுங்க செத்துப் போச்சு… கர்த்தரும் காப்பாத்தல.. மாரியாத்தாளும் காப்பாத்தல… கவெர்மெண்ட்டுதான் காப்பாத்தணும்…
  13. உழைக்கிறவன் வண்டியதானே போலீஸ் புடிச்சு ஸ்டேஷன்ல வைச்சுக்கும்.. எந்த ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னிருக்கா..?
  14. இங்க பாக்க முடியாது. அப்பலோலதான் பாக்கனும்னா, ஓட்டு ஏன் கவர்மென்டுக்கு போடணும். அப்பலோவுக்கே போட்ரலாமே..?
  15. சாராய அதிபர்களுக்கும், கொலைகாரர்களுக்கும் இரண்டடுக்கு பாதுகாப்பு கொடுக்குது இந்த மானங்கெட்ட அரசு
  16. நாட்ல இருக்கிறவங்கள எல்லாம் நடைபிணமா ஆக்கிட்டு யாருக்கு காட்ட போறீங்க உங்க கருணைய.. ஊழல் இல்லாம கக்கூஸ் கட்ட வக்கில்ல. உங்ககிட்ட கருணைய எதிர்பார்த்தது தவறுதான்..
  17. பெத்தவளையும், கட்டுனவளையும் விக்கிற மாதிரில்ல ஓட்ட விக்கிறானுங்க….
  18. மன்னர் மன்னன் மக்கள் ஜனாதிபதியானாவுடன் பெட்டி கேஸ் பொன்னுஞ்சலுடன் இவர் நடத்தும் போராட்டங்கள்:                                     ஆற்று மணல் கொள்ளையை எதிர்த்து REVERSE WALK போராட்டம், காவல் துறையின் காட்டு தர்பாரை எதிர்த்து (கை)விலங்கு தாவும் போராட்டம், சாலை வசதி கேட்டு ரோட்டில் தவழும் போராட்டம், ஊழல் செய்யும் சட்ட மன்ற உறுப்பினரை (கரடியே) காறித்துப்பும் போராட்டம், வேளாண்மை நிலங்களை அபகரிக்கும் செயலை எதிர்த்து குளோபல் போராட்டம், அதிகமாக கட்டணம் வசிக்கும் பள்ளிக்கூடத்தை எதிர்த்து வாயில் அடித்து போராட்டம், ரேஷன் அரிசிப்பதுக்கலை கண்டித்து வாய்க்கரிசி போராட்டம், விவசாயிகளின் வாழ்வுரிமையை காக்க கோவண போராட்டம், தாலிக்கு தங்கம் தாலியறுக்க டாஸ்மாக் – மதுவிலக்கு போராட்டம்!!!!!
இறுதியாக ,


"ஜோக்கர்" உங்களை எல்லா இடத்திலும் குதூகலிக்கச் செய்யும் ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் அல்ல..
சற்று பொறுமையோடு பார்க்க வேண்டிய சமூகப் படம் !!!!…
 
 

Tuesday, October 4, 2016

THE GAME (HOLLYWOOD - 1997)

 
நெறைய ஆங்கிலப்படங்கள் பார்த்திருக்கேன்!!! என்னதான் உலகத்தை காப்பாத்தறது, நாட்டை காப்பாத்தறது இப்படி ஏதும் கெடைக்கலைனா கப்பலு, ட்ரைனு, ஏரோபிளானுனு காப்பாத்தி ப்ரம்மாண்டமா எடுத்தாலும் ஒரு சில படத்தையெல்லாம்  வாய பொளந்துண்டு பார்த்திருக்கேன்!!!! எப்படிடா இவனுங்களுக்கு மட்டும் இப்டி தோணுதுன்னு யோசிச்சிருக்கேன்!!!! அந்த வகையில பார்த்த படம் தான் "THE GAME"
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6nHjySHcsSyz_xIvvZL1vuxuQADguRKrm7B8Qjra4DwRjvjpAOF3VwfjWlM3x1k4EVk7MMPZy8Doy5G_Gr8Ts3uFvwYBYSZ1h2FK_Izrte7EX-MhMfWztn2purM9RkgxpGoZUAm1qTiRj/s320/8853acc09b9ee9659c64d84560ed1980.jpg
 
கதை:
 
NICHOLAS VAN ORTON ஒரு பெரிய பிஸினஸ்மேன். பொண்டாட்டி  டைவர்ஸ் பண்ணிட்டு போனதுக்கு அப்பறம் தனியா ஒரு பங்களால இருக்காரு. ஒரே ஒரு கெழவி மட்டும் அப்பப்ப சோறு பொங்கி போட வருது.
 
நிக்கோலோஸோட 48-ஆவது பிறந்த நாளப்ப அவரோட தம்பி CONRAD ஒரு GIFT ப்ரெசென்ட் பண்றான். அது என்னனா CRS(Consumer Recreation Center)ங்கிற கம்பெனி நடத்தற ஒரு GAME-க்கான என்ட்ரி டோக்கன்.
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgwoylcDPIXq6aqNMDF2tJhmCcWcvdM0vIGdu_j4xy2tULPWQWPPXVGcim3Rx0grw8y_b3fo5prA23aLUytgipK9dPvkEIiws3zjz7lbSdDX45kHavl__YzdppL38xguMzgQz4zHtI2io5/s320/game5.png
 
இத வெளையாடறதுக்கு ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனமும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் வேணும்னு சொல்லி நிக்கோலஸ விளையாடி பார்க்க சொல்லிட்டு போய்டுறான்.
 
ஆனா நம்மாளு WORK பிஸில அத மறந்துடறான். ஒரு நாள் கம்பெனி விஷயமா வெளிய போகும்போது அங்க CRS கம்பெனியோட போர்டு பார்குறான். "சரி நம்ம தம்பி சொன்னானே... போய்த்தான் பாப்போமே" அப்புடின்னு தம்பி கொடுத்த card எடுத்துகிட்டு உள்ளே போறாரு.
 
போய் பாத்தா அது ஒரு கார்ப்ரேட் கம்பெனி மாதிரி இருக்கு. Card  குடுத்த உடனே இவருக்கு  சில எக்ஸாமெல்லாம் வச்சி ஏதேதோ டெஸ்ட் பண்ணிட்டு, "உங்க game எப்ப வேணாலும் ஆரம்பிச்சிடும்... உங்களுக்கு புடிக்கலன்னா நீங்க எப்போ வேணாலும் இதுலருந்து வெலகிக்கலாம்" அப்புடின்னு ரூல்ஸ் லாம் சொல்லி அனுப்பிச்சிடுறாங்க.
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-Nck0p_q7bR4kHDQaQlfWwO3E8q512OVwCvn8GSRF_VCOVeTCkAOHxBXdp9RhWPYM6OfAn6nmWfRozmhq9BrP1w_SAbZdTWY3FnaGfoZEPU81g49tFBYhpDTLswsTcRuqh3cPJLpMqNgp/s400/large-screenshot2.jpg
 
கொஞ்ச நாள் கழிச்சு CRS-கிட்டேயிருந்து , உங்க அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆயிடுச்சுனு போன் வருது. சரி போனால் போகட்டும் போடானு நம்மாளு வீட்டுக்குவரும்போது, அங்க யாரோ குப்புற கவிந்த மாதிரி விழுந்து கிடக்கறதா பாக்குறான் . பக்கத்துல போய் பார்த்தா, அங்க கோமாளி பொம்மை மாதிரி ஒண்ணு கெடக்குது!!! என்ன பண்றதுன்னு தெரியாம அத வீட்டுக்குள்ள எடுத்துட்டு போயி வச்சிட்டு, டிவிய போடுறாரு!
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheTzq7YwPhgmAeRM8lZzdjO9EH8AW7k4VLCzgqJzaoXXFNru1aBdfNHN-Qni-EbskHN6mIlvUzft2XME5y2HjA20rCgRw70uDIZW3Ol4DnrT89FrWWJfB0jzNRiF03bFTKkpTJ4oQN87x5/s400/1411777482600.jpg
 
டிவில வர்ற நியூஸ் வாசிக்கிற ஆளு நிக்கோலஸ் கூட பேசுறாரு!!! அப்பறோம் இவரு வீட்டுல என்னென்ன பண்றாரோ அதெல்லாம் டிவில வருது!!!
 
அப்போ ஆரம்பிக்கிற கன்பீசன் தான். அதுக்கப்புறம் அவரோட வாழ்க்கை மொத்தமும் கன்பீசனாயி, போற எடமெல்லாம் இவருக்கு எதிரிங்க. எது game எது ரியல்னு தெரியாம பைத்தியம் புடிச்சமாதிரி சுத்திட்டு திரியறாரு. இவர கொலை பண்ணவும் வேற ட்ரை பண்றாங்க.
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAJ7fv_HLAS1_9J8myUd8xOjTw1X_Zo5BCIeMk8H2gCaRWS9eQkWtmc0knXX7D9vh3svolSk2eHM9rDmwOKfKkTcjP8mfag_lpQ2Qa6BLZquRBGjPx4r5I9F9Z4oAVQwDAs_8TfO9-fvOi/s400/the-game-michael-douglas-2.jpg
 
நம்மாளுகிட்ட இருக்கிற மொத்தப்பணத்தையும் எடுத்துட்டு மெக்ஸிகோல கொண்டு போய் போட்டுடுறாங்க. அப்பறம் என்ன பண்றதுனு தெரியாம பிச்சையெடுத்து ஊருக்கு வராரு!! யார் பண்றாங்க எதுக்கு பண்றாங்கன்னு தெரியாம ஒரு  கட்டத்துல மெண்டல் மாதிரி சுத்துறாரு. ங்கொய்யால!!!! எவன் இதெல்லாம் பண்றானோ அவனை போட்டு தள்ளிடலாம்னு துப்பாக்கி எடுத்து கெளம்பறாரு!!!!
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgqJuDobAD0oQfrUt2wcQKMcCBUD1cvvPvLd3xjcPUPy15CC0ok5YGpOtY8LN4TK5c5SfPbcxVXfI13LM-Jqw4kyoi3nJ0A-vOUWyWKRNf1PUpRBN9s61r2yXbCtY_yY13QxkSyn1A5EYq/s400/sjff_03_img1062.jpg
 
இதை யாரு பண்ணுனா , அவரு எப்படி இவனுகள கண்டுபிடிச்சாருங்கறத  படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க !!!!!!
 
 என்னடா படத்தை முழுசா சொல்லிட்டான்னு யோசிக்காதீங்க!! இது இன்டெர்மிசன் வரைக்கும் தான்!!! இதுக்கு மேலதான் மெயின் பிக்ச்சரே!!!!!
 
படம் உருவான விதம் :

 
இந்த படத்தோட திரைக்கதையை 1991-லயேய் எழுதிட்டு PRODUCER கிடைக்காம சுத்திட்டிருந்தாங்க!! அப்பறோம் MGM இதை வாங்கி படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணுனா, ஒருத்தனும் வாங்க வரல!! சரினு வந்த விலைக்கு இந்த கதையை இன்னொரு கம்பெனிக்கு வித்துட்டாங்க!!!
 
 கடைசியா நம்ம டேவிட் FINCHER-கு கதை புடிச்சு போய் படமா எடுக்கலாம்னு நெனைச்சா PRODUCER-கிட்ட அந்த அளவுக்கு பணம் இல்ல. சரி அதுக்குள்ள நாம வேற படம் பண்ணுவோம் அவரு பண்ண படம் தான் SE7EN (நம்ம திரிஷ்யம் படம் எடுத்தாரே ஜீத்து ஜோசப் அவரோட மெமொரிஸ் படம் (தமிழ்ல, அருள்நிதி நடிச்ச ஆறாது சினம்) இந்த படத்தோட இன்ஸபிரேஷன் தான்) SE7EN தாறு மாறு ஹிட்டு!!!
 

 
இப்ப அவருக்கு எந்த ஒரு பணப்பிரச்சனையும் இல்ல!! கொறஞ்சது 6 வாரத்துக்கு மேல உக்காந்து படத்தோட ஸ்டோரி அண்ட் ஸ்க்ரீன்பிளேவ மாத்துனாங்க!!! " ஒருத்தன எவ்வளவு வேணா பயப்பட வைக்கலாம் ஆனா சாகடிக்க மட்டும் கூடாது!!!! இதை மட்டும் வெச்சிட்டு full படத்தையும் எழுதி முடிச்சாங்க!!!  
 
இந்த படத்தில ஹீரோவா நடிக்க மைக் டக்ளஸ் ஒதுக்கவே இல்ல. ஏன்னா, இது பெரிய பட்ஜெட் படம், produce பண்றவங்களோ சின்ன கம்பெனி அதனால படம் வருமோ வராதோனு அவருக்கு டவுட்டு!! பட் கதை புடிச்சிருந்ததால நம்பி நடிச்சாரு!!அவரு நெனச்ச மாதிரியே படமும் பெரிய ஹிட்டு!!!!
 
 எந்த ஒரு திரில்லர் படத்திலயும் ஆரம்பம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கிளைமாக்ஸும் முக்கியம்!! எவ்வளவு ட்விஸ்ட் வேணா வெக்கலாம் ஆனா அதுக்கெல்லாத்துக்கும் எல்லோரும் நம்பற மாதிரி ஒரு ஆன்செர் கொடுக்குறமாங்கிறது தான் முக்கியம்!!! அந்தவகையில பார்த்தா இந்த படம் சக்ஸஸ்!!!!
 
 படத்துல ரொம்ப புடிச்சது ஹீரோவோட வாய்ச்சும் அவரு பேசுற வசனமும் தான்!! என்ன இங்கிலிஷ் படம் பார்த்தாலும் subtitle இல்லாம பாக்குறது ரொம்ப கஷ்டம் பட் இதில அந்தப்பிரச்னை இல்ல.
 



 எனக்கு புடிச்ச சில வசனங்கள்:
  1. I’m so fucked. They just fuck you and they fuck you and they fuck you, and then just when you think it’s all over, that’s when the real fucking starts!
  2. The game is tailored specifically to each participant. Think of it as a great vacation, except you don't go to it, it comes to you.
  3. Discovering the object of the game is the object of the game
  4. You don't play it, it plays you
 அப்பறோம், குறிப்பா நம்ம எல்லாருகிட்டேயும் இந்த பழக்கம் இருக்கும்னு நெனைக்கிறேன்!!! ஏதாச்சும் திரில்லர் இல்லனா ஒரு மர்டர் மிஸ்டரி படம் பார்த்தாலும் நாமளே ஒரு கதை யோசிச்சுப்போம், ஹீரோ கண்டுபுடிக்கிறதுக்கு முன்னடியே நாமளே கொலைகாரனை கண்டுபுடிக்க ட்ரை பண்ணுவோம்!! ஒருவேளை சரியாய் இருந்த நமக்கு நாமே சபாஷ் போட்டுக்குவோம்!!!
 
 நீங்க இந்த படம் பார்க்கும்போது இதெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க!!!! என்னால சுத்தமா ஒன்னு கூட கரிக்டா GUESS பண்ண முடில.
 
 உங்களால எவ்ளோ தூரம் கண்டுபுடிக்க முடிஞ்சதுனு கமெண்ட் பண்ணுங்க!!!
 
 கொசுறு :
 
 தமிழ்ல இந்த மாதிரி படமெல்லாம் வர்றது ரொம்ப கஷ்டம்!!! எனக்கு தெரிஞ்ச ஒரே படம் நம்ம புரட்சி தளபதி விஷாலண்ண நடிச்சு திரு டைரக்ட் (நான் சிகப்பு மனிதன் டைரக்டர்) பண்ணிய சம்ம….சம்ம....சமரன்!!! சூப்பர் படம் இல்லனாலும் மொக்க படம் கெடயாது!!!! முடிஞ்சா அந்த படமும் பாருங்க!!